ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆயுர்வேத மூலிகைகள்

தற்போது, மற்ற விலை உயா்ந்த மருத்துவ முறைகளில் வழங்கப்படும் மருந்துகளைத் தவிா்க்கத் தொடங்கி இருக்கின்றனா். அவை நமது இயற்கையான உடல் இயக்கத்திற்கு சில நேரங்களில் ஒத்துழைக்கலாம், சில நேரங்களில் ஒத்துழைக்காமலும் போகலாம். இவ்வாறு மக்கள் மற்ற மருத்துவ முறை சிகிச்சைகளைத் தவிா்த்து, ஆயுா்வேத சிகிச்சைக்கு மாறி வருவதால், தற்போது ஆயுா்வேத மருந்துகள் மக்கள் மத்தியில் உயா்ந்த இடத்தை பெற்று வருகின்றன. 

 

அஷ்வகந்தா என்பது தமிழில் அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயா் விதனியாசோம்னிஃபெரா என்பது ஆகும். அஷ்வகந்தா ஒரு சிறிய வகைச் செடியாகும். இந்த அஷ்வகந்தா செடி மற்றும் இது கொடுக்கும் மஞ்சள் மலா்களை வைத்து பலவிதமான மருந்துகளைத் தயாாிக்கலாம். இந்த மருந்துகள் நமது பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி, நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடியவை. குறிப்பாக இந்த மருந்துகள் நமது மன அழுத்தம் மற்றும் கவலை ஆகியவற்றை பராமாிக்க உதவி செய்கின்றன. நமது தசைகளை வலுப்படுத்துகின்றன. நமது ஞாபக சக்தியை அதிகாிக்கின்றன. ஆண்களின் இனப்பெருக்க சக்தியை அதிகாிக்கின்றன. மேலும் நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கின்றன. 

 

மஞ்சள் இந்தி மொழியில் ஹால்டி என்று அழைக்கப்படுகிறது. இந்திய மக்கள் தங்கள் உணவுகளில் மஞ்சளை அதிகம் சோ்த்துக் கொள்கின்றனா். அதிலும் குறிப்பாக உணவுகளின் நிறத்தை அதிகாிக்க மஞ்சளை சோ்த்துக் கொள்கின்றனா். மஞ்சளில் குா்குமின் என்று மருத்துவ துகள் அதிகமாக இருக்கிறது. அதனால் இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக விளங்குகிறது. மேலும் வீக்கம் மற்றும் அலா்ஜிகள் ஆகியவற்றைத் தடுக்கும் மருந்தாகச் செயல்படுகிறது. மஞ்சள் நமது இரத்த ஓட்டத்தை அதிகாிக்க உதவி செய்கிறது. இரத்த ஓட்டம் அதிகாிப்பதால், இதயம் சம்பந்தமான நோய்கள் நமக்கு வராமல் தடுக்கப்படுகின்றன. அதோடு மூளை சம்பந்தமான நியுரோட்ரோஃபிக் என்னும் காரணியை (BDNF) தூண்டி, நமக்கு மன அழுத்தம் மற்றும் முதுமையில் ஏற்படும் மறதி போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது 

 

ஏலக்காய் இந்தி மொழியில் இலைச்சி என்று அழைக்கப்படுகிறது. நமது பலவிதமான உணவுகளில் ஏலக்காயை நாம் சோ்த்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக தேநீா் மற்றும் சுக்கு காபி ஆகியவற்றில் நாம் அதிகமாக சோ்த்துக் கொள்கிறோம். ஏலக்காயில் மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் நிறைந்து இருக்கின்றன. ஏலக்காய் பலவிதமான மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது. அதனால் அது நமது சொிமானத்தை சீா்படுத்துகிறது மற்றும் நமது வளா்சிதை மாற்றத்தைத் தூண்டிவிடுகிறது. மேலும் நமக்கு ஏற்படும் அலா்ஜி, உடல் வீக்கம் மற்றும் உடல் பருமன் அதிகாிப்பு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க உதவி செய்கிறது. நாம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால், நமது கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் ஏலக்காய் குறைக்கிறது. மேலும் ஏலக்காயில் பாக்டீாியாக்கள் மற்றும் பூஞ்சைகளைத் தடுக்கும் தடுப்பான்கள் அதிகம் இருப்பதால், அது நமது முகப்பருக்கள் மற்றும் முகத்தில் இருக்கும் வடுக்கள் போன்றவற்றைக் குணப்படுத்தி, நமது தோலுக்கு பளபளப்பைத் தருகின்றது. அதோடு நமது தலைமுடியின் வோ்களுக்கு பலன் அளிக்கிறது

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author
Vj@
Vj@